எப்படி சொல்கிறாய்

அப்படியா என்று வினவினேன்..
அப்படித்தான் என்று பதில் வந்தது..
ஒ..இப்படித்தானா என்று புரிந்து கொண்டேன்..
இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல்
எப்படி சொல்வதென்று தவிக்கிறேன்..
இப்படித்தான் எப்போதும் இருக்கும் என்பதும்
அப்படி மாறி போய் விடுமோ என்பதும்
தெரியாத மந்தமான எண்ண கதியில் ..
இப்படியும் அப்படியுமாய்
உழலுகின்ற மனதை
எப்படி நிலைப் படுத்த..?
நான் நினைப்பதற்கு ஏறு மாறாய்
எப்போதும் பேசுகின்ற உனக்கு பெயர்
மனசாட்சி..
எப்படியோ..
நீ சொல்வதே நடக்கிறது எப்போதும்..
சாரங்களை சொல்லி சக்கைகளை ஒதுக்கி
எப்படி சரியாகவே சொல்கிறாய்
என் மனசாட்சியே!

எழுதியவர் : கருணா (11-Jun-15, 11:01 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : yeppati solkiraai
பார்வை : 381

மேலே