மாயவன் உனக்காக

கீதையின் கண்ணனே,
ராதையின் நாயகனே ,
கோபியர் கொண்டாடும் ரமணனே,
கோவிந்தா என்ற உன் நாமம் -என்
மனதில் கோலாட்டம் ஆடுதய்யா............

வெண்ணை உண்ட நீ
மண்ணையும் உண்டாய்,
மண்ணை உன்னட நீ - அந்த
விண்ணையும் அளந்தாய்
வாமனனாக ஒரு கோமகனின் உள்ளம் தெளிய ........

உன்
மந்திர புன்னகையால்
மனிதரெல்லாம் மாந்தளிர் போலாகின்றனர்,
மார்கழி முப்பதும் பனி மழை பொழிவது
மாயவன் உன்னக்காக......
மாதர்கள் அனைவரும் மங்களம் இசைப்பது
மன்னவன் உனக்காக .........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (15-Jun-15, 4:01 pm)
பார்வை : 214

மேலே