அழிந்த காலம்

அதுதான் அழகிய காலம்.......

அதிகாலை சேவல் கூவியது
கடிகாரம் இல்லை,
கடமையை செய்ய புறப்பட்டான்
கண்ணிய மனிதன்...........
==========
ஏர்பூட்டினான், ஏற்றம் இறைத்தான்,
ஏழ்மை நிலை அவன் நினைவில் இல்லை!
வெயிலின் வேர்வை துளிகளை
பயிருக்கு 'பனி' துளிகளாக தெளித்தான்!
===========
மனைவியின் 'கஞ்சி களையம்' தான்
அவனுக்கு 'இளைப்பாறும்' நேரம் உணர்த்தியது!
இப்படி
இயற்கையோடு கைகோர்த்து - அதன்
சிரிப்பை கண்டான் 'நெற்கதிர்களாக'.........
===============
பிறகு ..........
வெள்ளை நாகரிகம்
அடிமையானான் அந்த மோகத்திற்கு.....
கூவிய சேவல் ஆவியானது
இவன் பாவியானான்!
=======
சூரிய உதயம் பார்க்க
இன்று சுற்றுலா செல்கிறான்!
கடிகாரம் காலம் காட்டியும்
கண் விழிக்க மறுக்கிறான் ..........
=============
கடமையை செய்யாமல்
கடவுளை நினைக்கிறான்!
இயற்கையின் இதயத்தை மிதித்துவிட்டு,
இல்லாததில் இடம் பிடிக்க நினைக்கிறான்.......
===================
நாகரிக போர்வையில்
பசுமையை மூடிவிட்டான் !
'பசி' என்ற சொல்லுக்கு 'பாலிசி'
போட்டுவிட்டான் பக்கத்துக்கு நாடுகளுக்கு.........
==============
அந்த அழகிய காலம் அழிந்தது..........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (16-Jun-15, 1:01 pm)
Tanglish : azhintha kaalam
பார்வை : 103

மேலே