சுட்டும் விழி சுடர்

சுடும் இதயத்தில் நெருப்பாய் தெரிகிறது உன் பார்வை எனக்கு,
காதல் செய்யும் போது தெரியவில்லை எனக்கு
உன் பார்வை இப்படி சுடுமென்று.

பிரிவின் வலி கண்ணில் தெரியுதடி
தினம் தினம் நெஞ்சை கொல்லுதடி
உயிரின் விழி உன்னை தேடுதடி
எனக்குள்ளே என்னை வீழ்துதடி.

பேசி வந்த வார்த்தை சொல்லுதடி
கண்கள் ரெண்டும் உன்னை தேடுதடி
பழகி சென்ற நாட்கள் துரத்துதடி
உன் நினைவை மீண்டும் காட்டுதடி.

எழுதியவர் : நா ராஜராஜ (18-Jun-15, 6:24 pm)
Tanglish : suttum vayili sudar
பார்வை : 200

மேலே