நட்பே மன்னித்திடு

நண்பனே உன் நட்பை உணர
காலம் தாழ்த்திவிட்டேன்
தோள் கொடுப்பான் தோழன்
என்பதை உன் தோளில் என்னை
கல்லறைக்கு சுமந்து செல்கையிலே
உணர்ந்து கொண்டேன்
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை
ஒட்டிச்சிவந்த உன் கைகளை
கண்டபோது என் கண்கள் சிவந்தது
என் அன்னையை உன் அன்னையாய்
கண்ட உன்னை மறந்தேனே..!
இன்று என் மூச்சு நின்றப்பின்னே
உன் நட்பின் சுவாசத்தை உணர்ந்து
கொண்டேன்...