பாப்பாவுக்கு-2-ரகு

பெற்றோ ரைக் கடவுளாகப்
போற்றிட னும் பாப்பாவே
மற்றோ ரும் சொந்தமிதை
மனதிற் கொள்ளு பாப்பாவே !

தொப் பென்று விழுந்திடினும்
துடித் தெழனும் பாப்பாவே
தப் பென்று தெரியுதெனில்
திருத்திக் கனும் பாப்பாவே !

அந்தி யிலே விளையாடி
அளவ ளாவும் பாப்பாவே
சிந்தி யாமல் எச்செயலும்
செய்தி டாதே பாப்பாவே !

துருதுரு வென்று பார்க்கும்
துடிப் பான பாப்பாவே
சுறுசுறுப்பில் எறும்பு போல
சிறந் திடனும் பாப்பாவே !

மற்றோர் பொருளுக் காசைபட்டால்
மன்னிப் பில்லை பாப்பாவே
கற்றோர் கூறும் அறிவுரையைக்
கடை பிடிக்கணும் பாப்பாவே !

இரக்க குணம் உனக்குள்ளே
இருந் திடனும் பாப்பாவே
அரக்க குணம் ஒருபோதும்
அறிந் திடாதே பாபாவே !

துயரம் வரும் வேளையிலும்
துவண் டிடாதே பாப்பாவே
உயிரைவிட மானம் பெரிது
உணர்ந் திடனும் பாப்பாவே !

நிறங்களிலே பேத மில்லை
நினைவிற் கொள்ளு பாப்பாவே
வரங்கள் தான் வாழ்க்கையிதை
வாழ்ந்து காட்டு பாப்பாவே !

எழுதியவர் : சுஜய் ரகு (20-Jun-15, 8:19 pm)
பார்வை : 124

மேலே