நண்பன் என்பான் யாரடா
நண்பன் என்பவன் நீ செய்யும்
செயல்களில் அக்கறை உள்ளவன்;
நண்பன் என்பவன் நீ நினைப்பதெல்லாம்
புரிந்து கொள்பவன்.
நண்பன் என்பவன் உன் நன்மையிலும்,
துன்பத்திலும் பங்கு கொள்பவன்;
நண்பன் என்பவன் உன் செயல்களைப்
புரிந்து கொள்பவன்.
நண்பன் என்பவன் உன்னை
அணைத்துச் செல்பவன்;
நண்பன் என்பவன் உன்னைப்பற்றி
உண்மை சொல்பவன்.
நண்பன் என்பவன் உன்னைப்பற்றிய
புரளியை நம்பாதவன்;
நண்பன் என்பவன் உன்னுடன்
போட்டி போடாதவன்.
நண்பன் என்பவன் உன் தோல்வியிலும்
ஊக்கம் அளிப்பவன்;
நண்பன் என்பவன் உன் வெற்றிக்கு
என்றும் துணையிருப்பவன்.
உன் உயிரைக் காப்பவன், உனக்காக
உயிரைக் கொடுப்பவன்.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில், கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. 789 நட்பு