தினம் தினம்

விழியால் தூண்டிலிட்டு
எழுதத் தூண்டிவிட்டு எனை
வியப்பில் ஆழ்த்திவிட்டு
சிறகடித்துப் பறந்தவளே
இசையாய் உள்நுழைந்து உன்
திசையை மறைத்தாயே விழியீர்ப்பு
விசை கொண்டு என்னுள்
பசை போல் அமர்ந்தாயே
பெண்னே
நீ போன பாதையில்
நான் அனுதினம்
வருவாய் எனும் ஏக்கம்
தினம் தினம்