அழைப்பு பீடம்
அழைப்பு பீடம்:
அன்பளிப்புகளுக்கு எதிர்நீச்சல்
கற்றுக் கொடுக்கப்படும்.. பீடம்
சமயத்தில்
அழைப்பிதழ்கள் கூட
ஆயுதமாகி பலிவாங்கும்....!
வரவேற்புகளுக்கு
தலைவாசல் தொட்ட
காலடிகள் நன்றிகளுக்கான
தகுதி பெற்றது...!
வாழ்த்துரைகள் புறக்கணிக்கப்பட்டால் ஆழ்மனம் தூண்டிலோடு காத்திருக்கும்...!
அழைப்பிதழ்கள் ஒவ்வொன்றும் இருதரப்பு நேசத்தின் வாக்கெடுப்புகள்....!
விருந்தோம்பலை நிர்ணயித்து தான் அழைப்பு பீடம் புனிதமாகிறது...