அர்த்தமற்ற அழகு

பிரமன் வரைந்த ஓவியம் இல்லை நீ..
ஆனாலும்..
எனக்காய் , என் மனதில் , நான் வரைந்த ஓவியமே..

கவிங்கர்கள் எழுதிய கவிதையல்ல நீ..
என்னை செல்லமாய் கூபிடும் , ஹைக்கூ நீ..

இசைஞானி இசைதிட்ட இசையல்ல நீ..
இசைகாமலே ஒலித்திடும் அழகான ராகங்கள் நீ..

ஒப்பனை செய்து மிளிர்ந்திடும் கதாநாயகியல்ல நீ..
கற்பனை தாண்டிய , என் கதையின் நாயகி நீ..

அழகென்ற வார்த்தைக்கு அர்த்தம்மில்லை நீ..
ஆனால் ,
உன் முன்னே..
அர்த்தமற்ற வார்த்தைகளின் வரிசையில் , கடைசியாய் நிற்கின்றது .......இந்த...அழகு..
முருகன்..

எழுதியவர் : முருகன் மணி (8-Jul-15, 12:49 am)
Tanglish : arthamatra alagu
பார்வை : 105

மேலே