உன்னில் கரைகிறேன்
அன்பே
என் கனவுகளில் ஆயிரம்
கவிதைகள் தோன்றுகிறது.....
விடிந்ததும் உன்னிடம்
சொல்ல துடிக்கிறேன் விரைவாக,
ஆனால் உன் விழி பார்த்தவுடன்
என் கவிதைகள்
காற்றோடு கலந்துவிடுகிறது,
அதை மீண்டும் நினைக்கும் போது
நானும் கரைந்து விடுகிறேன் ..........
இப்படி
சொல்ல முடியா கவிதைகள் போல்
உன்னில் கரைகிறேன் ஒவொருநாளும் ....................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்