உள்ளேன் ஐயா

நன்று...
தேர்ந்தெடுத்த சொற்கள்...
தொடரவும்...
சிறந்த பாடுபொருள் ...
சிந்திக்கவைக்கிறது...
புதிய கோணம் ...
நல்ல கற்பனை ...
நல்ல படைப்பு...
அழகான கவிதை
அபாரம் தோழரே...
அவலங்களை பேசுகிறது...
அடடா அருமை...
இதில் ஒன்றை தேர்ந்தெடுத்து
கருத்துப்பதிவின்
கட்டத்துக்குள் என் வருகையையும்
பதிவு செய்துவிட வேண்டும் என
எழுத்துப்பலகையில்,
எழுத எத்தனித்தேன்..
முதல் எழுத்தை போட்டவுடனே..
முழுச்சொல்லும் வந்து விழுந்தது.!
"இந்தா..
இதுதானே
எடுத்துக்க
என்ற தொனியில்..!"