பால்நிலவு பெயர்காரணம்

பிறையாய் மண்ணில் பிறந்து
குறையாய் ஏதும் சிறிதுமின்றி
நிறையாய் அழகம்சங்கள் அமைந்திட
தரைநிலவாய் சொலிக்கும் ஒளிமகளவள் ...

வானம் அவள் எழில்புகழின்
பொலிவான பொழிவதனில்
தனக்கும் பங்கு பெற
வான் நிலவென பட்டமிட்டது

தேனும் உலகப்பூக்களுடன்
ஒன்றுகூடி கலந்து பேசி
தீர்மானம் செய்துகொண்டு
தேன் நிலவென பட்டமிட்டது

கள்ளியாம் வெள்ளியும் கூட
அல்லியவள் அழகுப்பெயருடன் அவள்பெயரையும்
சொல்லிச்சொல்லி அழைக்கப்பட வேண்டி
வெள்ளிநிலவென பட்டமிட்டது

இப்படியாய் பட்டு நிலவின்
பட்டப்பெயர்களுக்கான பெயர் காரணங்களை ஆராயந்தறிந்தேன்

பால் நிலவெனும் பெயருக்கான காரணம் மட்டும்
வானவில்லை விஞ்சிடும் வண்ணப்பிறையே !!
நீர்விடுத்து பால் பருகும் அன்னப்பறவையாய்
நீ பால் பருகும் பொழுது...

எழுதியவர் : (13-Jul-15, 10:49 am)
பார்வை : 303

மேலே