இன்னும் ஓர் இரவு

இமைகள் மூட மறுத்து
வைகறையின் இறுதி தருணங்களிலும்
உன் நினைவுகள் மட்டுமே
என் முன் நிழலாடியது..!

அந்த ஏகாந்த வேளையிலும்
என்னை விட்டகலாது
உடன்வரும் உன் கானல் பிம்பங்கள்
என் உயிரை உரசிப் போனது..!

மனதின் வலி
வார்த்தைவழி வராமலிருக்க
இமை மதகுகளைத் திறந்தேன்..!
வெள்ளப்பெருக்கோடியது..!!

நினைவுகளின் தேக்கத்தை
நீரினால் வெளிக்கொணர
நிசப்தமானது மனது..!
நிலவின்கீழ் மயானம்போல்..!!

இதம் உணர்ந்தது உயிர்..!
இனிவரும் வலியின் நாட்களில்
ஒன்று குறைந்தது என்று..!!

எழுதியவர் : சுதர்ஷன் (15-Jul-15, 5:11 pm)
Tanglish : innum or iravu
பார்வை : 87

மேலே