முழு நிலவின் முகவரி
தெரு மாறி
தவறான முகவரியில்
கதவை தட்டி விட்டேன்
கதவைத் திறந்தவள்
முகவரி அடுத்த தெருவில்
என்றாள்
மன்னிப்பு கேட்டு
திரும்பி நடந்தேன்
முகவரி தவறானாலும்
இந்த முகத்திற்கு
வரிகள் ஆயிரம் எழுதலாம்
எண்ணியவாறே
படியிறங்கும் போது
மீண்டும் திரும்பிப் பார்த்தேன்
முகவரி புத்தகம்
புன்னகையுடன் கதவை
மெல்லச் சாத்தியது !
முகவரி மாறினால் என்ன
முழு நிலவின் முகவரி
கிடைத்ததில் மகிழ்ச்சி !
முழு நிலவு மாலையின் முகவரியில்
தினம் வருகை தந்த போது
என் நாட்குறிப்பின் பக்கங்கள்
வண்ணங்களில் திரும்பின !
----கவின் சாரலன்