எனக்குள்ளும் ஒருவன்

எல்லோருக்குள்ளும் ஒருவன் உண்டு ...
எனக்குள்ளும் ஒருவன் ...

அவன் உண்மையின் உறை விடம் இல்லை ஆனால்
அவன் உள்ளத்தில் உறைவிடம் எனக்கு மட்டும் தான் ...

எல்லோரையும் சிரிக்க செய்து கண்ணில் நீர் வர வைப்பான்...ஆனால் என்னுடன் பேசும்போது மட்டும் அளவோடு தான் சிரிக்க வைப்பான் என்னை ..
.ஏனெனில் அதிகமாக சிரித்துகூட என் கண்ணில் நீர் வர கூடாது என நினைப்பவன் ..

பொன்னை பெரிதாக பார்க்கும் இந்த பூ உலகில் இந்த பெண்ணை மட்டும் நேசிப்பவன்.

அவனுக்கு எழுத தெரியா விட்டாலும் என் எழுத்துக்களை ரசிக்க தெரிந்தவன் ...

உலகை ரசிப்பவள் நான் ...அவன் உலகமே நான் தான் என குறி என்னை ரசிப்பவன் அவன் ..

என் சமையலை விட என் ரசனைகளை ருசிக்க தெரிந்தவன் அவன் ...

அவன் பெயரை தான் தேடுகிறேன் பல வருடங்களாக ....
தெரிந்ததும் சொல்கிறேன் என் பெயருடன் சேர்த்து ....

எழுதியவர் : வாசு (16-Jul-15, 11:46 pm)
சேர்த்தது : வாசு
Tanglish : enakullum oruvan
பார்வை : 138

மேலே