அவள் மொத்த உயரம் 64 முத்தங்கள்
உன் மொத்த உயரம் 64 முத்தங்கள்
என் அங்குல இதழ்களால் அளந்து கொள்கிறேன்
அதில் அடிக்கடி ஐயம் எழ
முதலிருந்து தொடங்குகின்றேன்
முன்னிருந்து பின்னாக பாயும்
கருத்தநதி –இங்கொன்றும் அங்கொன்றுமாய்
அடைப்புக்குறிக்குள் உறங்கிக்
கிடக்கும் விழிகள்
நாசிக்கு வழிவிட்டு விலகி நிற்கும்
உப்பிய கன்னங்கள்
அடுக்கிவைத்த தேன்
வடியும் சுளைகள்
தொடரும் இரண்டடி பயணங்களுக்குள்ளேயே
எண்ணிக்கை தவறுகிறேன்
உன் மொத்த உயரம் .....
எத்தனை முத்தங்கள் –இன்னும்
எண்ணிக்கொண்டேயிருக்கின்றேன்.