மதுமயக்கம்

மதியோடு இருபதினாலே மனிதன் என்கிறோம்
மதி மயங்கி கிடந்திடவே மதுவை உண்கிறாய் -நீ யார் ?

விழிப்போடு இருக்கும் போதே
வீழ்ச்சியுருகிறாய் மதி மறந்தால் ?

அறிவுசேர பள்ளி சென்றாய்
அறிவாற்றல் இழக்க மதுவோ !

சிறு எறும்பு உன் மெய் தனை தீண்டியபோது
உயிர் கொடுத்த அவள் உயிர் துடித்தது!
சிறு குடல் உள் அழியும்போது
சீர்கெட்டு சிந்தை இழந்து நீ நிற்கும்போது
உயிர் கொடுத்தவள் உயிர் கொண்டது பாவமோ என பறிதவிக்கிறாள்.

சீர் குலைந்து போனது
உன் நரம்பு மண்டலம் மற்றுமல்ல
சிறபிழந்து போனது
உன் இதயம் மட்டுமல்ல
உன் நாடும் வீடும் என உணராய்யோ !

விதை நெல் வாங்க வைத்திருந்த பணமோ
விதைக்க பட்டது எங்கோ!

மூவிரு மாதங்களாய் முந்தானையில் முடுஞ்சு
பாவி இவன் பார்வையில் படாமல் பதுக்கி வைத்திருந்தால்
பாசமிகு மகளுக்கு புது பாவாடை சட்டை வாங்கிடவே.
உன் அடி தங்காமல் ஓர் பிரசவம் நடந்தது
அது பதுங்கியிருந்த இடத்திலிருந்து.
உன் மகள் கனவிற்கு
அது ஓர் குறை பிரசவம் என அறிவாயோ!

கொண்டவள் கரம் பிடிக்கும் முன்னே
அவள் பித்தாய் இருத்த நீ
மது பித்தாய் மாறியது ஏனோ!

விடியல் வரும் என்று
வேள்வி ஒன்று செய்கிறாள் -விறகு தனில்
மண்ணெண்ணெய் வாங்க விருந்த பணத்தையும்
மன்னவனிடம் கொடுத்து.

நாளெலாம் உழைத்ததன் வழி தீர என்கிறாய்
என் வழி அறிவாயோ !

வாழ்விற்கும் குடிக்கிறாய்
வீழ்விற்கும் குடிக்கிறாய்
பிறப்பிற்கும் குடிக்கிறாய்
இறப்பிற்கும் குடிக்கிறாய்
கெளரவத்திர்கும் குடிக்கிறாய்
காரணம் ஒன்றை கையேடு வைத்துள்ளாய் !

பால் குடிக்கும் பாலகனுக்கும்
சாராயம் இதை கொடுத்து
இன்பம் காண்கிறிரே !
ஓர் விதைதன் முதல் முளையிலே
மூலயை முடக்குறிரே !

மாறுமோ இந்நிலை
சூல் கொள்ளுமோ ஒவ்வோர் மனதிலும்
மது இது வேண்டாமென
கருதரிகுமோ அரசுதனை ஆள்வோர் மனதினிலே
கற்பமாய் மாறி பிறபெடுக்குமோ
எம் பாரதம் மதுவில்லா குழந்தையாய் !

மதிகெட்டு தெருவிலே மாய்ந்து கிடப்போரே
திசை எட்டும் சொல்லுங்கள் இனி இது விசமென !

எழுதியவர் : vramakrishnan (18-Jul-15, 6:00 pm)
பார்வை : 110

மேலே