அனாதை குழந்தை
![](https://eluthu.com/images/loading.gif)
அழகிய முகம்
கொள்ளை கொள்ளும் அழகு
மாளிகை மறந்து வீதியில் உலவுகிறது!....
என்ன செய்கிறேன்
எதற்கு செய்கிறேன்
என்று சிந்திக்க தெறியாமல்
கரங்கள் நீட்டியே காசு கேக்குதம்மா
கடன்பட்ட வயித்துக்காக!....
அவனது பேசாத கண்ணீரும்
காவியம் பாடுதம்மா
அது எனக்கென யாரென்று
ஊரெங்கும் தேடுதம்மா!....
பாராட்டி சீராட்ட
உறவொன்னு தேடுதம்மா!....
யார் பெற்ற பிள்ளையம்மா
ஆதரவற்று நிற்குதம்மா!....
தாய்தந்தையின்றி நிற்குதம்மா
அனாதை அர்த்தமறியா
பிள்ளையம்மா!.........