முகநூல் காதலின் தாக்கம்
சுற்றியிருக்கும் உறவுகளை
மதிக்கத் தெரியாதவன்
சித்தம் கலங்கிய தன் அன்னையின்
உள்ளம் துடிக்கும் வலி அறியாதவன்
கண்களில் சமீபமாய் கவலையில்
சுருங்கிய கோடுகள் புலப்படவில்லை
கண்களின் ஈரம் வற்றிய நிலையறியாதவன்
சமுதாயம் பேசும் ஏளனப் பேச்சிற்கும்
நிதம் நிதம் உயிர்விடும் தந்தையின்
பாரத்தின் அழுத்தம் புரியாதவன்
அக்கறையாய் சொல்லும் சகோதரியின்
கருத்துக்களின் ஆழம் புரியாதவன்
கடைசியில் யாருக்காய்
இத்துனையும் புரியாமல்போன
இவனுக்கு
காதலி என்று
நினைத்துக் கற்பனையில் திளைத்து
வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டிருப்பவனுக்கு
காதலியின் கபட நாடகம் மட்டும்
புரிய போகிறதா என்ன?