நிழலாய் வாழ்ந்திடுவோம்

நிஜ(ச)த்தை காட்டிலும்
நிழலின் உருவம் ஓங்கி உயர்ந்து உள்ளது!

நிஜத்தின் நிறம்
எதுவானாலும்
நிழலின் நிறம் ஒன்றே...

நிழலுக்கு ஏமாற்றத் தெரியாது...
ஏமாறவும் தெரியாது...

நிஜம் இரண்டும்
ஒன்றை ஒன்று
மோதிக் கொள்கையில்
நிழல் இரண்டும்
உரசிச் செல்கின்றன
எதையும் உணராமல்...

வெயிலின் தாக்கத்தில்
நிழலில் ஒதுங்க மரம் ஏது!
என் அருகில் வந்திடு
என் தேக நிழலில் ஒதுங்கிடு !
உனை அணுவும் அண்டாமல்
பார்த்துக் கொள்கிறேன்!

நிஜமாகத் தான்
வாழ முடியவில்லை...
நிழலாக வாழ்ந்திடுவோம்!

~நிஜத்தின் போலிமையில் நிழலின் ஏக்கம்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Jul-15, 6:30 am)
பார்வை : 424

மேலே