அக்னி சிறகொன்று இளைப்பாற நினைத்ததோ
அறிவியல் உலகில்
மட்டுமா
அனைத்துலகிலும் விரிந்த
உன் சிறகுகள்
இளைப்பாற நினைத்ததோ.......!
கனவு காணுங்கள்
என்றாய்
வல்லரசாவோம்
என்றாய்
கனவு மெய்யாகும் முன்
நீ மெய் விட்டு பறந்தாயே
நியாயமா......?
மரணத்திற்கு மனமேயில்லை
ஊழல் நரிகளும்
காமப்பேய்களும்
இன்னும் உலாவிக் கொண்டிருக்க
உன்னை கொண்டு சென்றதே
சாபமிடுகிறேன் நான்
அட மரணமே
உனக்கும் அது விரைவாய்
வரட்டும்
எங்கள் கைகளை
உடைத்திருக்கலாம்
நம்பிக்கையை உடைத்துவிட்டாயே
அட மரணமே
சாபமிடுகிறேன் நீயும்
நாளை
இந்நாட்டின் ஏழைகளில்
ஒருவனாய் பிறப்பெடுப்பாயென
ஏவுகணை மனிதன்
அவர்
எங்கள் வாழ்வுதனின்
சுடரானவர்
அவரை பிரித்தாயே
அட மரணமே சாபமிடுகிறேன் நான்
ஒளியில்லா காட்டில்
வழியற்று போவாய் என