அக்னி சிறகு எங்கே
![](https://eluthu.com/images/loading.gif)
சோர்வு என்ற -
சொல் கூட - உன்னுள்
சோம்பல் முறிக்கும்.
ஆனால் உன் -
இதயத்துள் வந்த
சோர்வைப் போக்க
காலனை
அழைத்தாயோ !
முதல் குடிமகன்
என்ற அங்கீகாரம் -
தந்தும்
எளிமையை மணந்த
பிரமச்சாரியே -
உன் - எளிமையைப்
பரப்ப - விண்ணுலகு
சென்றாயோ !
கண்களை மூடி
கனவு காணச்
சொன்னாய் -
நாங்கள் கண்ட கனவு
மெய்ப்படும் - என்ற
நிறைவில்
கண்களை மூடிக்
கொண்டாயோ !
உலகம்
முழுவதும் - உன்
எண்ணச் சுவடுகளை
பதித்த நீ ....
இறைவனின்
இல்லத்திற்கு
உரையாடச்
சென்றாயோ !
பசுமையைப்
பரப்ப - மரங்களை
நடச் சொன்னவன்
நீ !
மழையைத் தவறாமல்
பெய்யச் சொல்லி
சிபாரிசுக்குச்
சென்றாயோ !
வர்த்தகம், அறிவியல்
பற்றி
பேசச் சென்ற
நீ -
மௌனத்தைப்
பரிசாக்கி
பாதியிலே
சென்றாயோ !
உனக்காக
நான் ஏன்
அழ வேண்டும் !
கண்ணங்கள்
ஏனோ நனைகிறது !
அக்னிச் சிறகே ...
மீண்டும் வா !
மீண்டு வா !
குழந்தையாய் அல்ல ...
பேரிளம் வாலிபனாய் !
உன்னை ஒரு
முறையாவது
கட்டித் தழுவ
ஆசை !