உண்மையான மக்கள் தலைவர் யார்

கனம் காமராஜ் ஐயாவுக்கு அடுத்தபடியாக, நம் கண்முன் நிற்பவர் அறிவர் அப்துல் கலாம் அவர்கள்தான்.
நம் அனைவரின் உள்ளத்திலும்...
ஈடுகட்ட முடியாததோர் இழப்பைக்குறித்த சோகம்,
நன்கு கற்ற, நாகரீகமான ஒரு மேதையை இழந்த பெரிய வலி,
ஒரு மேன்மைபொருந்திய மனிதரின் வாழ்க்கையையும் அவருடைய சாதனைகளையையும்பற்றிய அமைதியான, ஆழமானச் சிந்தனை,
இளைய தலைமுறைக்குப் போதித்து, அவர்களை ஊக்குவித்து, உருவாக்கும் பணியை தம் கடைசி மூச்சுமட்டும் நிறைவேற்றியதோர் ஆசிரியரின் பசுமையான நினைவுகள்...

இந்த வேறுபாடைக் கவனித்தீர்களா?

ஒரு பண்புள்ள மகானின் மறைவுச் செய்தி கேட்டபோது எல்லா கட்சி, மதம், சாதி, மொழியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அமைதியான, வருத்தமான சூழ்நிலைக்கும்.

ஓர் அரசியல்வாதியின் சாவுச் செய்தி வெளிவரும் முன்பே நடக்கும் கட்டாயக் கடையடைப்பு, தீவைப்பு, சாலை மறியல், சூறையாடுதல், தனியார் மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல், கட்சி, சாதி, மதம், மொழி மோதல் போன்ற வெறியாட்டத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் கவனித்தீர்களா?

உண்மையான "மக்களின் தலைவர்" யார்?
எளிமையானவர்,
தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொத்தும், தனிச் சலுகையம் சேர்க்காதவர்.
எல்லோரையும் சக மனிதனாக மதிப்பவர்,
எல்லோராலும் எளிதாகச் சந்திக்கக் கூடியவர்,
வெற்றியை சகப்பணியாளர்களுக்கும், தோல்வியை தனக்கும் அளிப்பவர்.
மாணவர்களுக்கும் இளைய தலைமுறைக்கும் முன்மாதிரியாக வாழ்பவர்,
நல்ல சிந்தனையாளர்,
சிந்திக்கத்தூண்டும் எழுத்தாளர்.
மக்களோடு மக்களாக வாழும் "சாதாரண" மாமனிதர்.
எப்பொழுதும் எதிர்காலத்தில் வாழுபவர்.
காலத்தால் அழியாதவர்.

எழுதியவர் : தினா.. (28-Jul-15, 9:34 pm)
சேர்த்தது : தினருச்சி
பார்வை : 71

மேலே