வரவேற்ப்பு
அறியாமை இருள்தன்னை அகற்றி , மின்னும்
அறிவொளியில் திளைத்திடவே ஞாயிறாகி
நேரிசாரும் வழிசெல்லும் முத்தே ! எங்கள்
நெஞ்சத்தில்நீ நின்றாய் , ஒளிரவைத்தாய் !
உறவாக உனைக்கொண்டு நாங்கள் , மண்ணும்
உலகத்தில் பேறுபெற செய்தாய் ! என்றும்
திறனோடும் , முறையோடும் , நிர்வாகத்
திறமையோடு திகழ்கின்ற தலைவனே வருக ! வாழ்க !
உருவண்ணம் மலைவண்ணம் ஆனபோதும்
உளவண்ணம் பால்வண்ணம் கொண்டு நின்று ,
வருமின்னல் ஓட்டிநிதம் தூள்தூளாக்கி
வாழ்விக்க வந்தவனே ! நாங்கள் போற்றும்
பெருமானே ! கல்வியெனும் மாளிகையும்
பூமிதனில் வீழாமல் காக்குந் தூனே !
அருளோடும் நெஞ்சோனே ! வாளைவிட்டே
அமர்ந்துள்ள தண்ணிலவே ! வருக ! வாழ்க !
பார்க்கின்ற விழிகளிலே கருணை காட்டி ,
பளிங்காக பாலாக உள்ளம் நாட்டி ,
சேர்க்கின்ற புகழெல்லாம் கல்வித் தாயின்
சீரடியில் வைக்கின்ற நல்லோய் ! ஏழ்மை
தீர்க்கின்ற முறைமையிலே மாரியாக ,
தீங்குதனை எண்ணாத அன்னையாக ,
பார்க்கின்றோம் உம்மைநிதம் வாழ்க ! உம்மை
பாவாலே வருகவென வரவேற்கின்றோம் !