கண்ணீர் எழுதும் கவிதை
ஐயா..
தாங்கள் இவ்மண்ணுலகை விட்டு
பிரிந்த செய்தி கேட்டு
நெஞ்சம் தாளாது
இதயம் வலித்து -என்
கணங்கள் கண்ணீரால்
எழுதும் வரிகளிது ..,
தாங்கள் என்றும் உறைப்பதுபோல்
இதுவும் ஓர் கனவன்றோ
என இருந்துவிட்டால்
இன்பம் கோடி பிறக்கும்
எங்கள் நெஞ்சுதனில் ...
ஒரு தாயை
ஐயா என்றல்லவா அழைத்தோம்
நாங்கள் ...
உங்கள் பிள்ளைகளை
அழவைத்து போனது நியாயமா
நீங்கள் ??
எளிமையின் உருவமாய் ..,
பாசத்தின் இலக்கணமாய்..,
நம்பிக்கையின் ஊற்றாய் ..,
பாரதத்தின் ரத்தினாமாய்..,
இந்தியர்களின் அடையாளமாய் ..,
தங்களுக்கு உதாரணம் காட்ட
பக்கம் ஒன்று
பத்தாது என்றும்...,
அழுது புரண்டாலும்
திரும்ப போவதில்லை என
தெரிந்தும்
மனது மருகி ,
விழி ததும்பி ,
கண்ணீரில் மிதகின்றோம்..!!
இதுவரை நல்வழி காட்டிய
நீங்கள்
இல்லமால் இனி
எவ்வழி செல்வோம்
நாங்கள்..???
தாங்கள் விதைத்த விதை
நம்பிக்கை என்ற விதை
எங்களுள் இருக்கின்றது..
நிச்சயம் அது
விருட்சகமாக வளரும்
எம்பதில் சிறிதளவும் ஐயம்மில்லை
தாங்கள் கண்ட கனவு
parathathai உங்களின் ஆசியுடன்
நாங்கள் உருவாக்குவோம் என்பதில்
கடுகளவும் மாற்றமில்லை ...
ஐயா ..
நீங்கள் இறைவனடியில் ஓய்வேடுங்கள்
இனி ஒட்டுமொத்த இந்தியர்களும்
ஓயாது பாடுபடுவோம்
உங்களின் கனவை மெய்யாக்க
என்றும்....என்றென்றும்..
ஜீவன்