அய்யா APJ அப்துல்கலாம் அவர்களின் இரங்கற்பா

அன்பான மன்னவரே
அணுசக்தி நாயகரே
சாதனை யாளராக
சகாப்தம் படைத்தவரே

ஏழையாய் பிறந்தாலும்
ஏணியாய் வாழ்ந்தவரே
இளைஞர்கள் மனந்தனிலே
இளமையாய் இருப்பவரே

இந்திய அரசியலில்
இல்லாமல் இருந்தாலும்
குடிமக்களை வழிநடத்தும்
குடியரசுத் தலைவராகி

மண்ணுக்கும் தமிழுக்கும்
மாண்புகழைச் சேர்த்தவரே
மங்காத புகழுடைய
மாசிலா மனத்தவரே

"கனவுகளைக் காண்" என்று
கனவாகிப் போனீரே
உம்நினைவில் நாங்களின்று
உயிரற்றுப் போனோமே

அணுவைப் பிளப்பதனால்
அணுசக்தி தான்கிடைக்கும்
இனிஅணுவைப் பிளந்தாலோ
அப்துல்கலாம் அங்கிருப்பார்

விவசாயி உறங்கினாலும்
விதைகளுமே உறங்காது
உறங்கிவிட்ட கலாமே
உறங்காது உம்நினைவு.

எழுதியவர் : டிஜிட்டல் சரவணன் (31-Jul-15, 7:04 pm)
சேர்த்தது : டிஜிட்டல் சரவணன்
பார்வை : 146

மேலே