திருவிளையாடல்
கடவுளை தேடும் கண்களே
இதோ உங்கள் கடவுள்.!!
அண்டத்தை ஆளும் ஈசன்
அனாதையாக கிடக்கிறார்.!!
கோள்களை படைத்த பகவான்
கோணிப்பையில் துயில் கொள்கிறார்.!!
ஈசன் பாதம் தொட ஏங்கும்
பக்தர்களே அவரை முழுதாக
தொட்டு தூக்க மனம் இல்லையா.??
விண்ணைத்தொடும் கோவில்கள்
இருக்கையிலே வீதியில்
வீற்றிருக்கிறாரே.!!
தங்ககாசுகள் உண்டியலில்
புரளுகையிலே சில்லறைகாசுக்கு
திருவோடு ஏந்துகிறாரே.!!
தூங்கிகொண்டிருக்கும் கடவுளை
கொஞ்சம் தட்டி எழுப்புங்கள்
காரணம் யாதுவென கேளுங்கள்.!!
பதில் இதுவாகவும் இருக்கலாம்.?
-திருவிளையாடல்