நீயும் நானும்

நீயும் நானும் யாரோ இன்று ;
நினைவில் வாழ்தல் நன்று .

நின்னாருகே நானிருந்தேன் அன்று ;
நினைவோடு நாமிருக்கிறோம் இன்று.

தனியாக வருவாய் அன்று ;
துணையாக வருவேன் என்று.

காதலால் இணைந்தோம் அன்று;
காலம்தான் பிரித்ததோ இன்று ?

அருகிருப்போரை மறந்து கண்டுற்றோம் அன்று ;
அருகிப்போற்குமரைத்து கண்டுருகிறோம் இன்று.

பருவத்தால் காதலுற்றோம் அன்று:
பாசத்தால் கட்டுற்றோம் இன்று ,

நீயும் நானும் யாரோ இன்று ;
நினைவில் வாழ்தல் நன்று.

எழுதியவர் : ருத்யா / அரங்கமொழியால் (4-Aug-15, 3:27 pm)
Tanglish : neeyum naanum
பார்வை : 107

மேலே