இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை -முஹம்மத் ஸர்பான்

அறிவியல் அறிவியல் .....,என்று
உன்னைச் சூழ பொருள்கள் கூடி
வாழும் மானிடா நீ ஓர் மூடன்....,
மாயவுலகில் கண் காண்பன
மெய்யன நம்பி ஏமாந்து வாழும்
வாழ்க்கை தானா?நீ கற்ற கல்வியின் அறிவு.
அன்பு,பாசம்,நேசம்,இரக்கம்
கருணை என்பவற்றை சுவைத்ததில்லை;
பகிர்ந்தளித்து உண்டதில்லை;அன்னை
மடியில் துயிலதில்லை;மனையாளுடனும்
ஈன்றெடுத்த குழந்தை முத்துக்களுடனும்
கொஞ்சி விளையாடியதில்லை;இவையே!
உன் வாழ்வில் கிடைத்ததில்லை................,
விடத்து..,
நீ உழைத்த பணத்திற்கு பெறுமதியில்லை;
கற்ற கல்வியில் அர்த்தமில்லை.
அன்று...,
என் மூதாதை வாழ்வை சுவைத்து
தாகம் தீர்த்தான்;இன்று நீயோ.....?
ஆழியில் மிதக்கும் சிப்பி போல்
மனத்தாகம் தீர்க்க ஏங்குகிறாய்....,
வலி சுமந்து ஈன்ற அன்னைக்கும்
சேய்க்குமிடையில் தாய்ப்பாலெனும்
உறவில்லை;சிந்தும் கண்ணீரிலும்
உள்ளத்திலும் தூய்மையில்லை..;
நிற்கும் தரிக்கும் மிதக்கும் விண்ணுக்கும்
தொடர்பில்லை;கேட்டால் நவீனம் என்கிறாய்,
என் மூதாதையின் அறநெறியை
தட்டிக் கழித்து..,சொப்பன மேடையில்
அறிவியலை எட்டிப்பிடித்து உன்
சாதனையென புதுமை நிகழ்த்தினாய்
ஏது பலன்.....? (பாகம் 2 தொடரும்......)