மாவேந்தன் ராசேந்திரன்

ஆடி ஆதிரையில்
ஆதவன் உதித்தானே..
அகிலம் முழுதும்
ஆள அவதரித்தானே...
தமிழர் வீரத்தை
மெய் சிலிர்க்க வைத்தானே...
கடலைத் தாண்டியும்
கரம் உயர்த்தினானே...
தரணியெங்கும் சோழப்
புகழ் ஒலிக்கச் செய்தானே...
தோற்றவருக்கும் தோழமை
இவன் ஒருவனே...
வெற்றி வாகைச்சூடினாலும்
கருணையாலே ஆட்சிப் புரிந்தானே...
வேந்தனுக்கெல்லாம்
வேந்தன் இவனே...
ஆயிரமாயிரம் ஆண்டானாலும்
எங்கள் நெஞ்சையாளும் மன்னன் இவனே...
-அருண்வேந்தன்

எழுதியவர் : அருண்வேந்தன் (11-Aug-15, 11:37 am)
சேர்த்தது : அருண்வேந்தன்
பார்வை : 392

மேலே