கமலியோட கதை- 2
ராம ராம ராம!! ஃப்பாஆஅ என்ன வெயில்.. பட்டு புடவையும் கட்டிட்டு தாங்க முடியல பெருமாளே.. இந்த குமுதா முகூர்த்த நேரத்த கொஞ்சம் முன்னாடியே வைக்ககூடாதா???...
ஹும்ம் அவ என்ன பண்ணுவா ஜோசியர் சொன்ன டைம்க்கு தானே அவ கல்யாணத்த நடத்தியாகணும்.. இந்த 'சரோ' வேற "பால நெய்யாக்கனும்னு" பாதிலையே விட்டுடுபோயிட்டா . நன் ஒரு புத்திகெட்டவ கல்யாணம் முடிஞ்சு போறப்ப பொறுமையா புத்திமதி சொல்லிருக்கலாம்..
இப்போ நம்ம கூட 'ஆமாம்சாமி' !??போடறதுக்கு தோடு இல்லாம நமக்கு கையும் ஓடாது காலும் ஓடாதே..
( அம்மம் நீங்க என்ன அங்க பண்ணிட்டு இருக்கீங்க???.. சும்மா எழுதுலையே எந்நேரம் மூழ்கிட்டு இருக்கபோறிங்க!!.. என் கூட ஒரு எட்டு வர்றது.. மதிஸ்ரீ கல்யாணத்துல அப்படி என்னதான் நடக்குதுநு நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கலாம் இல்லையா..!!! வாங்க வாங்க சீக்கரம்.. நா அப்படியே மெதுவா உள்ள போறேன் ஏன் பின்னாடியே வந்துடுங்க.. சரியா??!!!).
ம்ம்ம்ம் யாராவது தெரிஞ்சமுகம் இருக்கான்னு பாக்கலாம்.. ஆடடடடே நம்ம தெரு முழுக்க ஒருத்தர் விடாம அழைப்பு கொடுத்துக்க போல நம்ம குமுதா கெட்டிக்காரி.. கூட படிச்சவங்க வேளைக்கு போறபக்கம்முனு எல்லார்க்கும் பத்திரிக்கை கொடுத்திருக்கா.
நல்ல மனசுக்காரி.. நல்லா வாழட்டும் அவ தலைமுறை.. பொண்ணு கூட 'அவளமாதிறியே' எண்ண எடுப்பான லட்சனமான முகம்..
( சும்மா சொல்ல கூடாதுங்க ரொம்ப அழகான லட்சணமான அன்ன கொஞ்சம் கோவகாரியன பொண்ணு முனுக்குனாதிக்கு முன்னாடி கோபம் வந்துடும்.. அழுதாலும் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராது.. அலுதகாரி அதுலமட்டும் அவங்க அப்பாவ ஒரிட்சு வட்சுருப்பா.. சரி வாங்க மண்டபத்துக்குள்ள போகலாம் கால்லெல்லாம் ஒரே வலி போய் கொஞ்சம் உக்காந்து பேசலாம்.. )
"கமலிக்கா!!!!" வாங்க !!! வாங்க!!! வாங்க!!! முன்னாடி நின்னு ஆசீர்வாதம் பண்ணவேண்டிய நீங்களே இப்படி மெதுவா வந்தா எப்படிக்கா.. என்னக்கா நீங்க மட்டும் வந்திருக்கிங்க அண்ணன் வரலையா???.. ---- இது குமுதா...
இல்லடிமா குமு அவரும் வரணும்னு தான் ரெண்டுநாளா முடியே இல்லாத தலைக்கு கலர் பண்ணிட்டு இருந்தார்.. யாரோ அவரோட பால்ய சினேகிதிக்கும் நீ அழைப்புகுடுதிருக்கயாம்.
அவ முன்னாடி பளீர்னு தெரியணுமாம் மனுஷனுக்கு இரூப்பு கொள்ளள ரெண்டுநாளா.. பாக்கரவரைகும் பார்த்துட்டு அப்பறம் எனன நினச்சாரோ தெரியலடி குமு!!!
நான் வரல நீயே போய்டுவந்துடு, "பொண்ணு மாப்ள" வந்ததும் நன் வீட்டுக்கு பொய் பாதுகறேன்னு சொல்லிடாருடி ..
---என்னக்கா சொல்லறிங்க??? அவங்களும்!! அண்ணன பார்த்து பேசணும்னு ரொம்ப ஆசபட்டாங்க.. நான் காலேஜ்ல படிச்சப்போ அண்ணனும் அவங்களும் ஒன்னாபடிசாங்க. ரெண்டு வருஷம் எனக்கு சீனியர்..
என்னடி சொல்ற குமு??!!!!.. ஹும்ம் நீ வந்தவங்கள வரவேத்ததுபோதும் உ நாத்தனார் பார்த்துப்பா.. வா என்கூட அவங்க யாரு எனன பேரு..
அக்காக்கா இருங்க இழுக்கதிங்க நானே வர்றேன் அறிமுகபடுதிவைக்கறேன்..
வாடி குமு.. இம்ம் சீக்கரம்??? இந்த ஷேர்குக வேற நடுவுல.. அவ மொகத்த பாக்கலாம்னா அடடடா.. ( நீங்களும் வாங்க என்கூட வாங்க அந்த அதிரூப சுந்தரிய நீங்களும் பாக்கணும் தானே??? ).
பொருங்ககா---- இதோ இவங்கதான்... குமுதா காட்டிய திசையில் அமர்ந்திருந்தது.. ஆ ஆ அவளேதான் அது அவளேதான்????!!!!
#***** கமலி தொடர்வாள் ***#