அறிவுமதி அப்பாவுக்கு அன்பு பிள்ளை எழுதுவது
அறிவுமதி அப்பாவுக்கு அன்பு பிள்ளை எழுதுவது
உங்களின் கடைசி மழைத்துளியில் தொடங்கியது எனக்கான தமிழின் முதல்துளி....
பூக்களின் பூகம்பம்
ஈழ தமிழரின் உதிரம் பட்ட ஒவ்வொரு இடமும்
இலங்கை அரசை உருகுலைக்க விதைக்கப்பட்ட
பூ விதைகள்...
பூக்களாய்தாம் இருந்தோம் எம்மில்
தேன்துளிக்கு பதில் தீப்பொறி வீசியது ஏனோ?
முத்தங்கள் சுவைக்க வேண்டிய எங்கள் மழலைகளின் முகம்களில் அணுகுண்டுகளின் ஆதிக்கம் ஏனோ?
எங்கள் மூத்த நாகரிகம் முழுவதும் தீயிட்டு கொளுதியபின்னும் முள்வேலிகளில் எங்கள் முதுகெலும்புகள் தைக்கபடுவது ஏனோ ?
அப்பா இது தொடக்கம் மட்டுமே
உங்களை உயிராய் நேசிக்கிறேன் உங்களின் கருத்த கண்ணகளை தொட்டு பார்த்த பொழுதில் கடவுளை தரிசிப்பேன்
உங்களை ஒருமுறை பார்த்துவிட்டால் போதுமென்ற உயிர்த்துடிப்பில் நான் .....
இனி உங்களின் கரம் பற்றி நடக்க ஆசைபடுகிறேன் என் சுட்டு விரலை சுடாமல் பிடித்து கொள்வீர்களா நகம் வளர்வது போல் நாள்தோறும் என் மனதில் நீங்கள் மட்டுமே..,
நீங்கள் நீங்களாக இருந்ததைவிட தமிழாக இருந்ததாலே உங்களை உயிராய் பிடித்தது
உங்கள் குரலில் குழந்தை இரசித்தேன் குயில் படித்தேன் பசுவை தேடும் கன்றாய் உங்களையே தேடிகொண்டிருக்கிறேன் உங்கள் காம்புகளை முட்டி முட்டி தமிழ்பால் குடிக்க வலி கொள்ளாமல் வாரி தருவீர்களா...
நீங்கள் சிட்டுக்குருவியின் சிறகை மரம்கொத்தியின் அலகை மைனாவின் இறகை மா பூவின் மகரந்தத்தை காக்கையின் வண்ணத்தை காடுகளின் நெரிசலை காதோர வண்டுகளின் இரைச்சலை காப்பாற்ற போராடும் உங்களோடு நானும்
ஒன்று சேர ஆவல்படுகிறேன் உங்களின் ஆணைக்கு இணங்க....
கோவண கிழவன் ஏறும் கூண் கிழத்தி நடவும் குமரிகளின் பல்லாங்குழியும் காளையர்களின் சிலம்பும் மழலை வண்டுகளின் கண்ணாமூச்சியும் காணாமற்போன பழைய கனவுகளாய்.
இவை அனைத்தும் முற்றுபெறாத வரிகளாக....
தொடக்கம் தவறென்றால் பிழை காத்துக்கொள்ளுங்கள்....
என் மன பெருவெள்ளத்தின் அணையிட முடியாத பக்கங்களை நேரில் உங்களோடு உரையாடி கழிக்க விரும்புகிறேன்
உள்ளம் கனிந்து ஒரு வாய்ப்பு தாருங்கள் அப்பா.
என் தவிப்பு உங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கையில்
இவன்
பாரதிதாசன்