நீயும் நானும் யாரோ இன்று
கடந்த கால நினைவுகளில்,
விழியோரம் நீர் பெருக்கெடுக்கிறது...
இதே போன்ற நிமிடங்களில்தான்,
அவன் என்னோடு காதலாக பேசினான்.
அவன் பேச்சுக்கு நான் ரசிகையானேன்.
அவன் கவிதையாக பேசியதில்லை,
ஆனாலும் அவன் இதழ் உதிர்க்கும் வார்த்தைகள்
எனக்கு கவிதையாகவே ஒலித்தது.
என் வருகைக்காய் அவன் காத்திருந்ததும்,
அவன் காத்திருப்பை நான் ரசித்ததையும்,
இன்றும் என் மனம் மறக்க மறுக்கிறது.
நீயும் நானும் நாம் என்ற காதல் கோட்டையில்
உலாவித் திரிந்த நிமிடங்கள்
இன்றும் நினைத்தாலே இனிக்கும்.
நாம் என்ற பேச்சு இன்று நினைவுகளாகிப் போகவே,
நீயும் நானும் யாரோ இன்று!
நினைவில் வாழக் கற்றது நன்று...