பிரிவு
ஓரிரு வார்த்தைகளை மட்டும்
சொல்லிச்சென்ற என்னவள், என்னை
மட்டும் தனியாய் புலம்பவிட்டு
...
சென்றால் நானோ கல்லடி
பட்டு கரையில் கிடக்கும்
மீனை போல வாடி துடிக்கிறேன்
என்னவள் நினைவிருக்கும் வரை
தனிமையொன்றும் தவிப்பல்ல
பிரிவொன்றும் போரல்ல.. அன்று
கம்சனின் அதர்மத்தை அழிக்க
யசோதையின் புதல்வன் போரிட்டான்
இன்று நானும் உன்னை பிரிந்து
என் தனிமையோடு மவுனம்
யுத்தம் நடத்துகிறேன் இதில்
வெல்வது நம் அன்பு கொண்டு
சுவாசித்த காதலே காதலே....
உன் அருகில் இருந்தால்
உன் சுவாசம் அறியாமல்
போய்விடுவேனோ என்று
அறிந்தோ அறியாமலோ
காலம் நம்மை பிரித்தது
எனக்கோ பிரிவொன்றும்
பெரிதல்ல உன் நினைவுகளை
என்னுள்ளே சிறகடித்து
பறக்கவிட்டு ரசித்துக்கொண்டிருக்கும்
உன்னவன் உன் மன்னவன்
பிரிவை ஒரு போதும் வெறுத்ததில்லை
அதிலும் ஒரு சுகம் உள்ளதடி
நீ அருகில் இருந்தும் கிடைக்காத
அந்த சுகம் "பிரிவே"