விலைமகளின் பக்தி

விற்பதற்கும் பிழைப்பதற்கும் ஆயிரம்
வழிகளையும், வாய்ப்புகளையும்
மற்றவர்க்கு கொடுத்த கடவுள்..நீ.

எனக்கு மட்டும் காளையர்
விரும்பும் கன்னியின் உடலை கொடுத்தது
எதற்காக..என் திறமையை விட என் சதை பிண்டம்
பிடித்த மானிடற்கு மத்தியில் நான் மட்டும்
பசியோட வாழ பைத்தியமா ..

அழகையும் கொடுத்து அறை ஜான்
வயிறையும் கொடுத்த உன்னை
புரிந்து கொண்டேன் .. என்னை நீ படைத்தது..
இவர்களுக்காக என்று .

இறக்க மனமில்லாமல் இருக்கின்றேன்
என் இறைவா! உன் செயல் அர்த்தமற்று இருக்காதென்ற
ஆழ்ந்த நம்பிக்கையோடு!

எழுதியவர் : கணேச மூர்த்தி (29-Aug-15, 9:07 pm)
பார்வை : 79

மேலே