சொல்வதெல்லாம் உண்மை அல்ல

கண்ணில்படுவதை கவரநினைப்பவன் கண்ணியம் குறைந்தவன்
கன்னிசிரிப்பதை காதல்என்பவன் பெண்ணியம் மறந்தவன்
எண்ணிக்கொண்டதை எளிதில்முடிப்பவன் புண்ணியம் செய்தவன்
தண்ணீயடிப்பதை தவிர்த்து விடுபவன் நன்னிலம் சிறந்தவன்

சொல்லிச்சென்றதை உடனேசெய்பவன் செயலில் வல்லவன்
அள்ளிக்கொடுப்பதை அளந்துகொடுப்பவன் வள்ளலில் நல்லவன்
கள்ளிச்செடியை களையெடுப்பவன் தொழிலில் தூய்மையாளன்
தள்ளிச்செல்பவரை விலகிநிற்பவன் வாழ்வில் நேர்மையாளன்

அவசரப்பட்டு முடிவுஎடுப்பவன் அறிவுக்கு நேர்எதிரானவன்
தட்டிக்கொடுத்து வேலைவாங்குபவன் வெற்றிக்கு பேர்போனவன்
துட்டுக்கொடுத்து காரியம்முடிப்பவன் தன்கையால் ஆகாதவன்
துட்டுப்பெற்று காரியம்முடிப்பவன் வாயாலதிகம் பேசாதவன்

அடையாததை அடைவதாகக் கூறுபவன் வரட்டு வேதாந்தன்
முடியாததை முடிப்பதாக மார்தட்டுபவன் முரட்டு சுபாவன்
படிக்காததை படித்ததாக பறையடிப்பவன் வெற்று ஆர்பாட்டன்
பிடிக்காததை பிடித்ததாக பிதற்றுபவன் பற்று சற்றும் அற்றவன்

அதிகாரம் கையிலிருப்பதாய் ஆடுபவன் நாட்டுக்கு அபத்தன்
சதிகார கூட்டத்திலிருந்து விடுபடாதவன் வீட்டுக்கு மத்தன்
பரிகாரம் தேடிக்கொள்ளாதவன் பாவத்தின் மொத்த பித்தன்
அரிதாரம் அப்பி நடிப்பவன் நவரசத்தின் சுத்த கூத்தன்

மாட்சியில்லாமல் ஆட்சிசெய்பவன் மக்களின் அரக்கன்
சூழ்ச்சியில்லாமல் ஆட்சிசெய்பவன் மக்களின் பக்தன்
வீழ்ச்சியில்லாமல் வெற்றிதறுபவன் மக்களின் தலைவன்
அயர்ச்சியில்லாமல் உழைக்கின்றவன் மக்களின் ஏகலைவன்

இலக்கணபிழையின்றி எழுதுகின்றவன் இலக்கியத்தின் இமயன்
இலக்கியத்தை அலட்சியம்செய்கின்றவன் படைப்புலகின் மடையன்
கணப்பொழுதும் சிந்தனையில் ஆழ்பவனே எழுத்துலகின் பிரம்மன்
மரணமகள் தழுவினாலும் புகழ்குன்றாதவனே மண்ணுலகின் கொம்பன்

கவிப்பறவையின் சிறகில் அமர்ந்தவன் இறவாப்புகழ் கவிஞன்
புவிப்பறவையின் சிறசில் அமர்ந்தவன் புகழ்மாறா புவிஞன்
மனப்பறவையை கூண்டில் அடைப்பவன் ஆசைவிரும்பா துறவன்
ஜனப்பறவையை யாண்டும் நேசிப்பவனே புகழ்விரும்பா மறவன்

எழுதியவர் : இரா.மணிமாறன் (31-Aug-15, 8:34 pm)
பார்வை : 76

மேலே