சோமாலியப் பிஞ்சுகள்

தெய்வமே..
எலும்புக்குக் கூட
கைகால்களா...!

பாரினில் பசிப்பிணி போக்கிட
உழும் எங்களுக்கு
இன்னும் கொஞ்சம் நெஞ்சுரம் தா
இறைவா...

ஏனென்றால்
பசி எங்கிருந்தாலும்
பழிச்சொல் எங்கள் மீதுதான்..
அதை முழுவதும் போக்கிட
முனைப்புடன் முயல்கிறோம்..

அதற்குமுன் சற்று ஆறுதலாய்
அங்கே பசிப்பிணி போக்கி
மகிழ்ச்சியைக் கொடு இறைவா..

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (4-Sep-15, 1:24 am)
பார்வை : 129

மேலே