என் காலம் கழியாது டி
நீ எனக்குன்னே பொறந்திட்டே
புது நெல்லா சமஞ்சுட்டே..
மச்சான் எ மனச மத்தாள கடசுட்டே..
மாசம் மூனனாலும் புதுப்பொண்ணா ஜொலிட்சுட்டெ..
அற நொடி பிரிஞ்சாலே அத்தான் அத்தான்னு ஓடிவருவே.. அம்மியிலே உரலபோல என்னோட சேர்ந்த்திருப்ப....
ஊ கண்ணுக்கு இட்ட மைய்ய கொஞ்சூண்டு எ கன்னுதுல இட்டுவைப்ப.. யாருமே பார்க்காதப்போ ஊ கன்னத்துல நா எச்சிவைபேன்...
பருவ மங்க உன்ன விட்டவிட்டு பட்டணத்துக்கு வந்துபுட்டே.. நாலு காசு இல்லேனா நாய் கூட நம்மள மதிகாதுன்னு...
பாலுந்தேனுமா நீ வளத்த எ உடம்ப்பு.. சுக்கா காயுதுடி ஊ நினைப்பாலே..
கஞ்சிகலயமெடுத்து நடந்துவரு ஊ அழகு.. இப்பவும் கண்ணுக்குள்ள வைரமா மின்னுதடி..
காசு இல்லேனாலும் இருந்துருவேன்.. அடியே எ செவப்பி ஊ கால் நகம் கடிக்காம எ காலம் கலியாதுடி...