யானையும் எறும்பும்

அல்லிக் குளத்தின் மேற்பரப்பில்
ஆங்கே மிதந்திருந்த இனிப்பு நிறை காகிதம்..
அதன் மீது ஊர்ந்தபடி சிறு எறும்புக் கூட்டம்..
எங்கிருந்தோ ஓடி வந்த யானை ஒன்று ..
பாய்ந்து குதித்தது குளத்தினில்..தொபுகடீரென்று..
எல்லா எறும்புகளும் போய் விழுந்தன குளக்கரையில்..
ஒன்று மட்டும் விழுந்த இடம் ..யானையின் தலையில்!
தூரத்தில் விழுந்த எறும்பொன்று..
கோபத்தில் கூச்சலிட்டது..
யானையின் தலையில் அமர்ந்திருந்த எறும்பைப் பார்த்து ..
"டேய் .மாப்ள...
அப்படியே தண்ணிக்குள்ள ..அமுக்குடா ..
அவன் தலையை."
என்று..
இப்படித்தான்..
அளவிற்குள் வராதவனை
அருமருந்தானவனை.. பெரியோனை
அகிலத்தில் எறும்பினும் சிறியோன் நான்
சமயத்தில் நினைப்பதுண்டு..
அவனினும் நான் பெரியோனென்று!

(நன்றி: ஒரு குறுஞ்செய்தி நகைச்சுவை - அதன் விளைவு இவ்வெண்ணம்)

எழுதியவர் : கருணா (8-Sep-15, 9:25 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : yanaiyum yerumbum
பார்வை : 886

மேலே