ஓ குருவிகளே குருவிகளே காத்ததிருங்கள் அதுவரை
ஓ! குருவிகளே! குருவிகளே
காத்ததிருங்கள் அதுவரை!
ஏறு பூட்டி உழவாச்சி
சேறு மிதித்து சேடையாசசி
நெல்லு விதைத்து நாத்தாச்சி
நாற்று பிடுங்கி கட்டியாச்சி
கம்பம் அழகர் வந்தாச்சி
காடு கழனி பசுமையாச்சி
அரையில் கோவணம் இருக்கியாச்சி
அழகா வளஞ்சி நின்னாச்சி
ஆளக் கூவி அழைச்சாச்சி
அளவு போட்டு வச்சாச்சி
நாற்று கட்டும் விழுந்துடுச்சி
நடவும் இப்போ துவங்கிடுச்சி
நாற்று நட்டபின் முதலாகும்.
முதல் நிமிர்ந்தால் பயிராகும்.
பயிர் சூல்தரிக்க கதிராகும்
கதிர் அறுக்க நெல்லாகும்
ஓ! குருவிகளே! குருவிகளே
காத்திருங்கள் அதுவரை!
காத்திருங்கள் அதுவரை
நிறைமாதம் நெருங்கும் வரை j