நகரத்தின் டிஸைன்

நீங்கள் கோடிக் கணக்கில் பணம் வைத்திருந்தாலும் இந்தப் ப்ளம்பர், எலெக்ட்ரீஷியன், மெக்கானிக், ஆசாரி நால்வரும் நீங்கள் இழுத்த இழுப்புக்கு வரவே மாட்டார்கள். இவர்கள் இரண்டு வகை. ஒன்று அதீதமாக ஏமாற்றுவார்கள். இல்லையா, அற்புதமான வேலை பார்ப்பவர்களாகவும், எளிதில் சிக்காதவர்களுமாக இருப்பார்கள்.

மேற்சொன்ன இரண்டாம் வகை ஆட்களைக் கண்டுபிடித்து தக்கவைத்துக்கொள்ள நமக்குக் குறைந்தது ஐந்து வருட ஏமாற்றம் தேவைப்படும்.

ஒருவழியாக சிக்கிவிட்டார்கள் என்றால், அவர்களுக்கு மரியாதை தருவதில் எந்தக் குறையும் வைக்காமலும், அன்பாய்ப் பேசியும்தான் நம் பக்கம் வைத்துக்கொள்ள முடியும்.

நகரத்தின் டிஸைன் அப்படி. பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒண்ணும் ஆட்டக் கூட முடியாது. இறுதியில் அன்பு மட்டுமே வெல்லும்.

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (19-Sep-15, 9:25 am)
பார்வை : 116

மேலே