மக்களே சிரிக்க மட்டுமே

மக்களே சிரிக்க மட்டுமே
1.
கணவன் – “இப்படி நாம அடிக்கடி
சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை
அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள்
பார்த்தா சிரிப்பாங்க... தெரியுமா?“
மனைவி – “அப்போ நாம போடுற
சண்டை அவ்வளவு தமாஷாவா
இருக்கு!“
2.
கணவன் – “இந்தத் தீபாவளிக்கு
உனக்குப் பட்டுப் புடவை!“
மனைவி – “அப்படியா! எதை வச்சி
சொல்லுறீங்க?“
கணவன் – “உன் வளையலை
வைச்சுத்தான் சொல்லுறேன்.“
3.
மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு
வயசாகிட்டே போகுதே. அவளுக்குச்
சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக்
கூடாதா?“
கணவன் – “அழகா லட்சணமா ஒரு
மாப்பிள்ளை கிடைக்கிறவரை
காத்திருக்கட்டு ண்டி.“
மனைவி – “எங்கப்பா அப்படியா
காத்திருந்தார்? “
4.
கணவன் – “என்ன இது மிக்ஸி,
கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட
சாமான்களோட வேன்ல வந்து
இறங்கிறே....!“
மனைவி – “நீங்க தானே சொன்னீங்க....
பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட்
அக்கவுண்டை குளோஸ்
பண்ணனும்ன்னு. அதைத் தான்
செய்துட்டு வர்றேன்.“
5.
கணவன் – “ஏன் நான் உள்ளாற
வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப்
போட்டுக்கிடுற?“
மனைவி – “டாக்டர் தான், தலைவலி
வந்தவுடனே கண்ணாடியைப்
போட்டுக்கச் சொன்னார்.“
6.
மனைவி – “வேலைக்காரி உங்க மேலே
விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க
பேசாம நிக்கிறீங்களே.. ..“
கணவன் – “திரும்பி வரட்டும்....
பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன்
பாரு.“
7.
மனைவி – “வர வர எனக்கு இந்த
நகை, புடைவைகள் பேரில் இருக்கிற
ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க“
கணவன் – “நிஜமாவா சொல்லற?“
மனைவி – “ஆமாம். எத்தனை
நாளைக்குத்தான் இந்தப் பழைய
நகைகளையும், பழைய
புடவைகளையும் கட்டிண்டு
இருக்கிறது..... “
8.
கணவன் – “இதோபாரு.... நம்ம வீட்டுல
சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு
வருது. இதைப் பாதியா குறைக்கணும்.
சரியா?“
மனைவி – “சரிங்க.... இனிமே நான்
மட்டும் சினிமாவுக்குப் போறேன்.“
9.
கணவன் – “வரதட்சணை வாங்கிட்டு
கல்யாணம் செஞ்சது என் மனசை
உறுத்திக்கிட்டே இருக்குது“
மனைவி – “அதுக்காக இப்போ என்ன
பண்ணுவதாம்...?“
கணவன் – “வரதட்சணை வாங்காம
இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு
பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு
இருக்கேன்“
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்.. ...
10.
மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப்
புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று
கனவு கண்டேன்“
கணவன் – “இன்னைக்கு அதைக்
கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு.
சரியாய்ப் போயிடும்...“
11.
கணவன் – “அரை மணி நேரமா நான்
கரடியா கத்துறேன். நீ பதில்
பேசலைன்னா என்ன அர்த்தம்?“
மனைவி – “எனக்கு கரடி பாஷை
புரியலேன்னு அர்த்தம்.“

எழுதியவர் : (19-Sep-15, 11:19 am)
பார்வை : 165

மேலே