பகல் கனவு
உடல் அமர்ந்திருக்கும் மனம் சிறகடிக்கும்
பூமிக்கும் ஆகாயத்திற்கும் பாவை எண்ணங்கள்
காதலின் வண்ணம் கொண்டு தூரிகை தீட்டும்
தூது போக புறக்கள் வரிசையில் நின்றாலும்
கண்கள் பார்ப்பது மனம் பாராமல் எண்ணமெல்லாம்
காதலில் கரைந்து கலைந்து கடிதமோ கானல் நீராகும்
கன்னியின் காதல் தவம் கலையாமல் இருக்கும்
வாயிலில் தென்றல் காற்று கூட காவல் நிற்கும்
தூரத்தில் காதலன் வருவது போல் கூட தோன்றும்