கல்வி கற்பிப்பது என்ன

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக

நடக்கிறதா இது நடக்கிறதா
நாள்தோறும் செய்திதாள் வாசித்தால்
மனம் நொந்து போகும்

கொலை, கொள்ளை, திருட்டு, மேலும் மேலும் .......
செய்திட்டது யார் என்று ஆராய்ந்தால்
கலை கல்லூரி மாணவன்,
இன்ஜினியரிங் கல்லூரி மாணவன்
மருத்துவ கல்லூரி மாணவன்
சட்ட கல்லூரி மாணவன்
படித்திட்டது என்ன செய்வது என்ன
காரணம் என்ன காரணம் என்ன
ஆடம்பரம் ஆடம்பரம் ஆடம்பரமோகம்
செல்போன் வேண்டுமா ஒரு கொள்ளை
இரு சக்கர வாகனம் வேண்டுமா ஒரு கொலை
கொலை, கொள்ளை அடித்து சம்பாதித்த பணம் அழிக்க
கற்பழிப்பு, தண்ணி, சோம்பேறியான ஆடம்பரம்

இரவு 9 மணிக்கு வெளி சென்றால்
கடைகள் மூடி இருக்கும்
திறந்து இருக்கும் கடைகளில் கூட்டமில்லை
ஒரு கடை ஒரேஒரு கடையில்
கூட்டம் அலை மோதுகிறது
இருபதுகளை தொடும் இளைய சமுகம்
இருபதுகளை கடந்த இளைய சமுகம்
2020ய படைக்கும் இளைய சமுகம்
சாராய கடை வாயிலில்,
டாஸ்மாக் என்னும் சாராய கடை வாயிலில்

ஆசைகளை அடக்கி வயிற்றை சுருக்கி
தேவைகளை தள்ளி வைத்து
கடமைகளை செய்ய கடனை பெற்று
படிக்கச் வைத்த பெற்றோர் நிலை ????
நெஞ்சு பொறுக்குதில்லையே
கல்வி பண்பை, பண்பாட்டை தொலைத்ததோ
மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும்
நல்லவை கற்கும் குணம்
அமைதியின் அற்புதம்
அஹிம்சையின் நன்மை
சொல்லித்தரும் கல்வி வேண்டும்.

எழுதியவர் : கீதா பாலசுப்ரமணியன் (24-Sep-15, 11:24 pm)
பார்வை : 144

மேலே