உன்னை நினைக்கும் தருணங்களில் சில
நண்பர்களுடன் சேர்ந்து
காதல் கடிதம் படிக்கும் போதும் .........
அக்காவின் புதல்வனுக்கு
பெயர் வைக்க பெயர் தேடும் போதும் .........
கவிதை எழுத
காகிதம் எடுக்க எண்ணும் போதும் ........
புடித்த பெயர் என்ன???
என்று தோழி கேட்கும் போதும் .......
படக்கதையில் கதாநாயகன்
பற்றி ஆலோசிக்கும் போதும் ....
யாரோ உன் பெயர்
சொல்லி அழைக்கும் போதும் .......
இன்னும்
பல தருணங்களின் போதும் ......
உன் பெயரையே
எனக்கு சொல்ல தோனுதடா .............