இனி நீ நிச்சயம் திட்டமாட்டாய்

நாம் காதலிக்கும்போது நம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நான் கேட்டேன்?

நீயோ,

எனது பெயரையே வைக்கலாம் என்றாய்,

நான் ஏன்என்றேன்?

அப்போதுதான் குழந்தையை திட்டுவது போல் உங்களை ஜாடையாக திட்டலாம் என்றாய்,

அது சரி,

இப்போது உனக்குமட்டும் திருமணம் ஆகிவிட்டது
குழந்தையும் பிறந்துவிட்டது,

குழந்தைக்கு என் பெயர்தான் வைத்தும் இருக்கிறாய்,


ஆனால்,

இனி நிச்சயம் உன் குழந்தையை நீ திட்டமாட்டாய் என எனக்கு தெரியும்,,,,,

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (28-Sep-15, 10:14 am)
பார்வை : 304

மேலே