காதல் கொண்டேன்

காதல் கொண்டேன்

காயாத வெண்ணிலா
சாயாத பொழுதினில்
நானவளைக் கண்டேன்
காதல் கொண்டேன்!

கனவுகள் மொட்டவிழ
பின்புல இசைக்காற்றில்
அழியாத கரையதனில்
அவளோடு நின்றேன்!!

கனவின் காம்புகள்
சுனைநீராய் ஊற்றாய்
மனதோரம் சுரந்திடும்
மயக்கத்தில் இருந்தேன்.

மனப்பிராந்தி என்றால்
போதையது தருமா
கனவுதானது என்றால்
காலிடறி விழுமா

பசியாறா வெறியிலும்
ருசியறியா அறிவிலும்
வார்த்தைக்கு வசப்படா
மொளனமே காத்தாள்

காதல்மொழி தனியோ
காதில் அது விழுமோ
காணாத தேசத்தில்
அதிசயம் நிகழுமோ!

காயாத வெண்ணிலா
சாயாத பொழுதினில்
நானவளைக் கண்டேன்
காதல் கொண்டேன்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (30-Sep-15, 12:34 pm)
Tanglish : kaadhal konden
பார்வை : 90

மேலே