ஐயத்துடன் ஐந்திணைகள்

ஐயத்துடன் ஐந்திணைகள்!!!
************************************************
குன்றும் மலையும் கொம்புத் தேனும்!!!
குறவர்குலம் காக்க குமரனும்!!!
குடைபோல் பசுமரங்களும்!! பறந்துதிரியும் பைங்கிளிகளும்!!
குதித்தோடும் அருவியும் கொண்டதெங்கள் குறிஞ்சியாம்!!

முற்றிலும் அடர்ந்த பசுங்காடும்! முல்லைப்பூவும்!!!
முதல்உணவாய் பாலும்! பால்சார்ந்த பொருட்களும்!!
முழுமுதற்கடவுளாய் யாதவர் வணங்கும் திருமாலும்!!
முட்டிமோதும் காட்டாறும் கொண்டதெங்கள் முல்லையாம்!!!

மண்மணம் கமழும் மும்மாரி மழையும்!!
மதில்போல் திமிழ் கொண்ட காளையும்!!! உழுவதற்கு ஏறும்!!
மண்ணைப் பொன்னாக்கும் உழவர்களும்!! தேவர்களின் அரசன் இந்திரனும்!!
மணிபோல் தானியங்கள் தவழும் வயல்களும் கொண்டதெங்கள் மருதமாம்!!!

நீலவண்ணக்கடலும்! நீந்திச் செல்லும் மீன்களும்!!
நீரில் மிதக்கும் படகும்!! நிதம் வணங்கும் வருணனும்!!
நெடுந்தூரம் உணவிற்காய் பயணிக்கும் மீனவனும்!!
நெஞ்சில் கனத்துடன் அவனுக்காய் விளக்கேந்திய தலைவியும் கொண்டதெங்கள் நெய்தலாம்!!!!

பரந்துகிடக்கும் மணலும்!! பொருட்கள் கவரும் கள்வர்களும்!!!
படர்ந்த கள்ளிச்செடியும்! பாலைபூவும்!!!
பனம்காட்டு நரியும்!!! வறண்டகிணறும்!!
பாலைநில தேவதை கொற்றவையும் கொண்டதெங்கள் பாலையாம்!!

இன்றோ மலைகளை உடைத்தால் குற்றுயிருடன் குறிஞ்சியிங்கே!!
காட்டினை அளித்ததால் மூச்சற்று போனது முல்லையிங்கே!!!
விளைநிலங்கள் விலைநிலங்களானதால் மண்ணாய் போனது மருதமிங்கே!!
புவியின் சமச்சீர் தொலைத்து ஐந்திணையும் ஒர்திணையாய் பாலாய் போயிற்று!!

மெய்நிலை உணர ஏழாம் அறிவும் வேண்டுமோ??
அடையாளம் தொலைத்த ஆடம்பரம் முறையோ!!!
அகம் நிமிர்ந்து சூளுரைப்போம் அகத்திணைக்காய்!!!
ஐந்திணைகளின் ஐயம் போக்கி புத்துயிர் கொடுப்போம்..இனிவரும் நம் சந்ததிக்காய்!!

எழுதியவர் : பிரபு balasubramani (1-Oct-15, 10:22 am)
பார்வை : 363

மேலே