காலை வெயில்
காலை வெயில் என் முகம் சுட
அம்மாவின் அலற்குரளோடு
என் விடியல் துவங்கும் ..
சோம்பல் முறிப்பு தேனிரோடு
அப்பாவின் செருமல் என
அத்தனை நிகழவும் என்னை
அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடும் .....
பணி உறுதியை அம்மாவிடம் கொடுத்துவிட்டு
என் உருதுணைக்கு சில நூறுகளை பெற்று செல்வேன்
அம்மா தந்த தேங்கா துவயளுடனான சாப்பாடு
சில நேரங்களில் ஐ டி நிறுவனம் வரை
சென்று திரும்பும் ........